பஞ்ச் டயலாக் வேண்டாம்! விஜய் திடீர் முடிவு!!

ரஜினிக்கு பிறகு விஜய் நடித்த படங்களில் அதிரடி பஞ்ச் டயலாக்குகள் அதிகமாக இடம்பெற்று வந்தன. ஆரம்பத்தில் கதைக்காக எழுதப்பட்ட பஞ்ச் டயலாக்குகள்கூட பின்னர் அரசியலை அட்டாக் பண்ணும் விதத்தில் இடம்பெற்று வந்தன.

vijay

இதற்கு தியேட்டர்களில் விசில் பறந்தபோதும், அரசியல் வட்டாரங்களில் எதிர்ப்புகள் அதிகரித்தன. இதனால் ஒருகட்டத்தில் விஜய் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

அதனால் புலி, தெறி படங்களுக்குப்பிறகு பஞ்ச் டயலாக் பேசுவதை படிப்படியாக குறைத்து விட்டார் விஜய். அப்படியே பேசினாலும் அது படங்களின் கதைக்கு சம்பந்தப்பட்டதாகத்தான் இருந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வரும் பைரவா படத்தில் முதலில் விஜய் ரசிகர்களை கருத்தில் கொண்டு சில காட்சிகளில் பஞ்ச் டயலாக் வைத்திருந்தாராம் பரதன். ஆனால் தான் சாதாரணமாக பேசினாலும் அதை அரசியலாக்கி விடுவார்கள் என்று அந்த பஞ்ச் டயலாக்குகளை கத்தரிக்க சொல்லிவிட்டாராம் விஜய்.

Related Posts