நீர் இறைக்கும் இயந்திரங்களைத் திருடியவர் கைது

arrest_1யாழில் நீர் இறைக்கும் இயந்திரங்களைத் திருடிய குற்றச்சாட்டில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்தார்.

நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளில் உள்ள விவசாயக் காணிகளில் வயலுக்கு இறைப்பதற்காக பொருத்தப்பட்டு இருந்த 10 மேற்பட்ட நீர் இறைக்கும் இயந்திரங்களையே இவர் திருடியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாளை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி மேலும் தெரிவித்தார்.

Related Posts