நீதி வேண்டி பத்திரிகை அலுவலகம் சென்ற மாணவர்கள்!

School- studentபாடசாலை பேருந்து சேவை சீரின்மையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் குதித்தனர்.தமக்கு நீதி கிடைக்க உதவுமாறு கோரி உதயன் பத்திரிக்கை காரியலாயத்துக்கு முன்னால் மாணவர்கள் சிலா் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் இருந்த அச்சுவேலி வரையான மாணவர்களுக்கான சேவையில் ஈடுபடும் 750 இலக்க இ.போ.ச சொந்தமான பேருந்து இரண்டு வாரங்களாக போக்குவரத்தில் ஈடுபடவில்லை.

வாரத்தில் புதன்கிழமைகளில் மாத்திரம் குறித்த வழியினுடான சேவையில் ஈடுபடுவதற்காக ஒரு பேருந்தை அனுமதித்து இருக்கின்றார்கள்.

ஏனைய நாட்களில் நாம் பேருந்துக்காக மாலை வரை காத்திருந்து பணம் செலுத்தி வீடு செல்லவேண்டியுள்ளது.மாணவர்கள் இது தொடர்பாக நடத்துநர் மற்றும் சாரதியோடு முரண்பட்டதாகவும் அதற்கு அவர்கள் கோண்டாவில் போக்குவரத்து காரியாலயத்துக்கு சென்று முறைப்பாடு செய்யுமாறு தெரிவித்தனர்.

நாங்கள் அங்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லை, ஆனால் உதயனுக்கு வர எங்களுக்கு போக்குவரத்து வசதி தேவையில்லை, நாங்கள் எல்லோரும் நடந்தே வந்துள்ளோம். நாங்கள் உங்களிடம் சொன்னால் தான் எங்களுக்கு தீர்வு கிடைக்கும் அதனால் தான் உங்களிடம் வந்துள்ளோம் என மாணவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று பத்திரிகை அலுவலகத்திற்க்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதே மாணவர்களை ஏற்றுவதற்க்காக இ.போ.சபை பேருந்து ஒன்று வந்து மாணவர்களை ஏற்றிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts