இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்ற அமெரிக்க தெற்கு மேற்கு ஆசிய நாடுகளின் இராஜாங்க திணைக்கள செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் செய்ததுடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
இவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் நீதித்துறை அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரை நேற்று சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தினார்.
அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவையும் அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்புடைய செய்தி