நிலவின் மேற்பரப்பை படமாக்கிய சந்திரயான்: 14 நாட்களில் என்ன நடக்கும்!!

சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் நிலவின் மேற்பரப்பு படங்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு (இஸ்ரோ) அனுப்பியுள்ளது.

இதன்மூலம் நிலவில் தரையிறங்கிய பிறகு லேண்டர் கலன் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டுள்ளதையும் இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள சமூகவளைதள பதிவில், சந்திரயான் -3 திட்டத்தின் லேண்டர் கலனுக்கும் பெங்களூருவிலுள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ பகிர்ந்துள்ள விவரங்களின்படி, லேண்டர் மற்றும் ரோவரில் உள்ள ஐந்து அறிவியல் கருவிகளில் இருந்து வரும் டன் கணக்கிலான தரவுகளை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்வார்கள்.

14 நாட்கள் கழித்தது, விக்ரம் லேண்டரின் ஒரு பக்க பேனல் விரிவடைந்து, பிரக்யான் ரோவருக்கு ஒரு சாய்வை உருவாக்கும். தேசியக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவுடன் கூடிய ஆறு சக்கர பிரக்யான் நான்கு மணி நேரம் கழித்து சந்திர மேற்பரப்பில் இறங்கி வினாடிக்கு 1 செ.மீ வேகத்தில் நகரும்.

நேவிகேஷன் கேமராக்கள் பொருத்தப்பட்ட ரோவர், சந்திரனின் மேற்பரப்பை ஸ்கேன் செய்யும். சந்திரனின் மேற்பரப்பு தொடர்பான தரவுகளை வழங்குவதற்கு பேலோடுகளுடன் கட்டமைக்கப்பட்ட கருவிகள் ரோவரில் உள்ளன.

இது நாசாவின் ஒன்று உட்பட எட்டு பேலோடுகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. Payloads (செயல்பாட்டிற்குத் தேவையான தரவுகள்) சந்திரனின் வளிமண்டலத்தின் அடிப்படை கலவை பற்றிய தரவை சேகரித்து லேண்டருக்கு தரவை அனுப்பும்.

ரோவர் லேண்டருடன் தொடர்பு கொள்ளும், லேண்டர் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் தொடர்பு கொள்ளும். சந்திரயான்-3ன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, நிலவில் ரோவர் சுற்றுவதை நிரூபிப்பதும், அங்கு அறிவியல் சோதனைகளை மேற்கொள்வதும் ஆகும்.

Related Posts