யுத்தத்தை வெற்றி கொள்ள தலைமைத்துவத்தை அளித்த முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வர வேண்டும் என சிலர் கூறுவதாக, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தான் அதிகாரத்துக்கு வரும் முன்னர், ஐக்கிய தேசியக் கட்சியால் யுத்தத்தின் ஒரு பகுதி நிறைவு செய்யப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தானது ஆட்சிக் காலத்தில் முக்கால்வாசி யுத்தத்தை நிறைவு செய்துவிட்டதாக சுட்டிக்காட்டினார்.
மீதமுள்ள கால் பகுதியே கடந்த ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவால் நிறைவு செய்யப்பட்டதாகவும் மிரிஹான பகுதியில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தின் போது, அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தனது ஆட்சிக் காலத்தில் தருவிக்கப்பட்ட ஆயுதங்களாலேயே யுத்தத்தை வெற்றி காண முடிந்ததாகவும், அது இல்லாவிடில் சிரமப்பட நேர்ந்திருக்கும் எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.