நவீன காலத்தை மாணவ சமுதாயம் வெல்ல வேண்டுமானால் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதும் அவசியமானது – ஜனாதிபதி

கல்வித்துறை மட்டுமல்லாது விளையாட்டுத்துறைகளையும் மேம்படுத்தும் பொருட்டு புதிய செயற்திட்டங்களை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

ant10

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை இன்றைய தினம் (14) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவிக்கையில், திறந்து வைக்கப்பட்டுள்ள இத்தொழில்நுட்ப ஆய்வுகூடத்தின் நன்மைகள் தொடர்பில் கல்வியமைச்சர் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பார். இந்தப் பாடசாலையில் கணினி கற்கைநெறிகளை முன்னெடுக்க வசதியாக 64 கணினிகளைக் கொண்ட கூடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நவீன காலத்தை மாணவ சமுதாயம் வெல்ல வேண்டுமானால் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதும் அவசியமானது.

கிராமப்புற பாடசாலை மாணவர்களும் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக நாடளாவிய ரீதியில் மகிந்தோதய தொழில் நுட்ப ஆய்வுகூடங்கள் பாடசாலைகள் தோறும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே பாடசாலைகளில் கல்வித்துறையை மட்டும் வளர்த்தெடுக்காது விளையாட்டுத் துறையையும் வளர்த்தெடுக்கும் நோக்கில் அடுத்த ஆண்டு முதல் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி செயற்படுத்தவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், மாணவர்கள் வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளும் அதேவேளை இந்நாட்டின் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்க முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

முன்பதாக பிரதான வாயிலில் பாடசாலைச் சமூகத்தால் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அவர்கள், கூடத்திற்கான நினைவுக் கல்லைத் திரைநீக்கம் செய்து வைத்ததுடன், நாடாவை வெட்டி கூடத்தையும் திறந்து வைத்தார்.

ஆய்வு கூடத்தின் ஏனைய பகுதிகளை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், அது தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடினார்.

இதன்போது, அமைச்சர்களான பந்துல குணவர்த்தன, டக்ளஸ் தேவானந்தா, பவித்திரா வன்னியாராச்சி ஈ.பி.டி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட கல்விப்புலம் சார்ந்தோர் உடனிருந்தனர்.

ant01

ant02

ant03

ant08

Related Posts