நலன்புரி நிலையங்களின் திருத்தப்பணிகளுக்காக நிதியொதுக்கீடு

போரினால் பாதிக்கப்பட்டும் இடம்பெயர்ந்துமுள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களின் திருத்தப்பணிகளுக்கென நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் – பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இதனை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் தமது நிலைதொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரியப்படுத்தியதை அடுத்து இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்திய அமைச்சர் – இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தினை தாக்கல் செய்தார். மேற்படி விடயத்தினை அங்கீகரித்த அமைச்சரவை, நலன்புரி நிலையங்களின் திருத்தப் பணிகளுக்கான நிதியொதுக்கீட்டினை மேற்கொள்ள முடிவுசெய்துள்ளது.

Related Posts