சுதேச வைத்தியதுறை அமைச்சின் நிதியுதவியுடன் நயினாதீவில் கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் சத்துணவு நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 11 மணிக்கு வேலணைப் பிரதேச சபைத் தலைவர் சிவராசா போல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சாலிந்த திசாநாயக்க மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டு வைத்தியசாலையினைத் திறந்துவைத்தனர்.
35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வைத்தியசாலை கட்டிட நிர்மாணப் பணிகளை கடற்படையினர் மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் அதிதியாக சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சாலிந்த திசாநாயக்க மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளர் கன்னங்கரா, வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி அட்மிரல் உடவத்தை மற்றும் கடற்படை அதிகாரிகள், நாகவிகாரை பீடாதிபதி, பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.