த.தே.கூ. உறுப்பினர் சு.க.வில் இணைவு

tnaதமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமீடியஸ், கட்சியிலிருந்தும் மாநகர சபையில் இருந்தும் உத்தியோகபூர்வமாக பதவி விலகவுள்ளார் என்று தெரியவருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ள அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாகவும், அதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இவ்விடயம் தொடர்பாக இன்று சனிக்கிழமை கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தாலும் சார்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts