தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை தலைவர் விஜயரட்ணம் எட்வின் டானியல் ஐ.தேக. உறுப்பினராக நியமனம் பெற்றுக் கொண்டார்.யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று(26) மாலை 5.30 மணியளவில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களிடையே சந்திப்பு இடம்பெற்றது.
அச்சந்திப்பின்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை தலைவர் – ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.
அத்துடன், யாழ். மாவட்டத்தின் 10 தேர்தல் தொகுதிக்குமான அமைப்பாளர்கள் தெரிவும் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் டி.எம். சுவாமிநாதன் உட்பட கட்சியின் அமைப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.