யாழ்ப்பாண றோட்டறிக் கழகத்தின் தையல் இயந்திரம் வழங்கும் நீண்ட செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று பருத்தித்துறை கந்தமுருகேசனார் சனசமூக நிலையம் மற்றும் ஓடக்கரை சனசமூக நிலையத்தில் 11 பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் யாழ் றோட்டரி கழகத்தின் தற்போதைய பொருளாலர் நிமல்சன் மற்றும் புதிய தலைமுறை இயக்குநர் ஜெபநேசன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கான தையல் இயந்திரங்களை வழங்கியிருந்தனர். இதுவோர் யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகத்தின் செயற்பாடாகும்.