தேர்தல் சுவரொட்டிகள், பதாதைகளை காட்சிப்படுத்த தடை

elections-secretariatநடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சுவரொட்டிகள், பதாதைகளை ஒட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அ.அச்சுதன் தெரிவித்தார்.

வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்தல் சட்டத்தின் பிரகாரம் விளம்பர பலகைகள், பதாதைகளை காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தடையினை மீறி விளம்பர பலகைகள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டால், காட்சிப்படுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் கூறினார்.

சுவரொட்டிகள், பதாதைகளை காட்சிப்படுத்துவர்கள் தொடர்பாக தேர்தல் திணைக்களத்தினால், இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிவுறுத்தலை மீறி செயற்படும் வேட்பாளர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் கைதுசெய்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே, வீதியோரங்களில் விளம்பர பலகைகள், பதாதைகள், சுவரொட்டிகள் போன்றவற்றினை காட்சிப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அனைத்து கட்சிகளிடமும், வேட்பாளர்களிடம் யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts