தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆயுதங்கள் மீட்பு

kopay-bombயாழ்ப்பாணம் கோப்பாய் தேசியக் கல்வியியற் கல்லூரியின் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கல்வியியற் கல்லூரியில் உள்ள கிணற்றினை துப்பரவாக்கும் போது ஆர்.பி.ஜி ஷெல் -01 கைக்குண்டு -01 அமுக்கவெடி 01 ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கல்லூரி அதிபரால் கோப்பாய் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினரால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த 16ஆம் திகதி கிணறு துப்புரவாக்கும் போது குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எனினும் கல்லூரி அதிபர் விடுமுறையில் இருந்த காரணத்தினால் தகவல் இன்றைய தினம் வழங்கப்பட்டது. அதன்படி இன்று காலை 8மணிக்கு இராணுவத்தினரல் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts