தேசியக் கொடி ஏற்றியவர் மீது தாக்குதல்

attack-attack66ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக தனது சுயதொழில் நிலையத்தில் தேசியக் கொடியினை ஏற்றிய சுயதொழில் நிலையத்தின் உரிமையாளரான அராலி தெற்கை சேர்ந்த 56 வயதான தம்பிப்பிள்ளை மகேந்திரராசா மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் படுகாயமடைந்த உரிமையாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.சத்துருசிங்க தெரிவித்தார்.

குறித்த நபர் வீட்டில் இருந்தபோது வந்த இனந்தெரியாத நபர்கள் “ஏன் தேசியக் கொடியை ஏற்றினாய்”, “நீ ஆமி, பொலிஸுடன் சேர்ந்தால் பெரிய கொம்பனா?” என கேட்டு தன்னை அடித்ததாக குறித்தநபர் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Related Posts