ஊஞ்சலில் கட்டியிருந்த மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று தெல்லிப்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் தனுசன் (வயது 8) என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.
ஞாயிறு மாலை வீட்டில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த வேளை ஊஞ்சல் மரம் முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுவன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலேயே சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.