தெரிவுக்குழுவில் இடம்பெறுவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை: சம்பந்தன்

sambanthan 1_CIநாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

‘இது ஒரு நாடாளுமன்ற தெரிவுக்குழு அல்ல. ஆனாலும் அரசாங்கம் ஒழு குழுவை தெரிவு செய்துள்ளது. எப்படியிருப்பினும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதா? இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

’13 ஆம் சீர்திருத்தத்தினூடாக கிடைக்கப்பெற்றுள்ள மாகாண சபை அதிகாரங்கள் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.

13 ஆவது சீர்திருத்தத்தின் படி காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts