தீபத்திருநாளுக்கு தடையில்லை; யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா

27 ஆம் திகதி மக்கள் ஆலயங்களில் விசேட வழிபாடுகளை நடாத்தவும் மணி அடிப்பதற்கும் யாழ். மாவட்டத்தில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார்.யாழ். பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன் போது எதிர்வரும் 27 ஆம் திகதி இந்துக்களின் விழாவான காத்திகை விளக்கீடு கொண்டாடப்படவுள்ளது.

எனினும் அன்றைய தினம் மாவீரர் நாளாக அமைகின்றது. அதனால் விளக்கீட்டினைக் கொண்டாடுதற்கு யாழ். மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதா ? என ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் போதே பொலிஸ் மா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Posts