‘திவிநெகும’ ஏழைகளின் பங்காளன் – அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா

daklausதிவிநெகும சட்ட மூலம் ஏழைகளின் பங்காளி என்று அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா புகழாரம் சூட்டியுள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சமூர்தி வழங்கல் நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில்சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்கட்சியினர் அனைவரும் கோசம் எழுப்பினர்.

எனினும் இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன்பயனை தற்போது தமிழர்களும் அனுபவிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலமாக வடக்கில் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பயனடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts