திவிநெகுமவின் கீழ் ‘மண் குடுவைகள்’

man-paanaiயாழில், திவிநெகும பயனாளிகளுக்கு விதைகளையிட்டு பயிர் செய்கை பண்ணுவதற்கு வசதியாக மண் குடுவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திவிநெகும திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்தக் குடும்பங்களுக்கும் திவிநெகும திட்டத்தின் கீழ் கிராம அலுவலர்கள் மற்றும் சமுர்த்தி அலுவலர்களினாலும் விதைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உரிய காணி இல்லையெனக் பலகுடும்பங்கள் கூறியதுடன் பயிர்ச்செய்கை செய்யாமல் கைவிட்டு இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் விதைகளை நாட்டக் கூடிய வகையில் மண்ணிலான குடுவைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த குடுவைகள் மூலம் சிறியளவிலான விதைகளை அதனுள் ஊன்றி பயிர்களை செய்கை பண்ணமுடியும் என்று யாழ்.மாவட்ட திட்டமிடற் கிளையின் அலுவலர் தெரிவித்தார்.

Related Posts