தாயின் மரணத்திற்கு நீதி கோரி நடக்கும் போராட்டத்தில் சிந்துஜாவின் கைக்குழந்தை!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் நடக்கும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கருப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் இறந்தவருக்கு நீதி வேண்டும். இப்படி இன்னொரு கொலை நடைபெறக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டனர்.
குறித்த பதாதைகளில் பணத்துக்கு மனித உயிரை விலை பேசலாமா? அரசே இலங்கையின் மருத்துவத்துறையை மறுசீரமைப்புச் செய்!, உயிர் காக்கும் வைத்தியர்களே மனித நேயத்தை மதியுங்கள்!
மருத்துவத்துறையின் அறம் எங்கே? சிந்துஜாவின் மரணம் இறப்பா? கொலையா?,நீதி நிழலாடுகிறதா? ,மாபியாக்களின் கூடாரம் ஆகலாமா வைத்தியத்துறை!,போன்ற வசனங்கள் எழுதப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க நினைக்கும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

எனவே உயிரிழந்த சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் குறித்த மரணத்துடன் தொடர்புடைய வைத்தியர் உள்ளடங்கலாக அனைவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தனர்.

குறித்த போராட்டத்தில் சிந்துஜாவின் தாய், சிந்துஜாவின் பிள்ளையான கைக்குழந்தை கலந்து கொண்டதோடு பெண்கள் அமைப்புக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள, மற்றும் அருட் தந்தையர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts