தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு

nurseயாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

தாதிய உத்தியோகத்தர்களுக்கு மனநோயியல் மற்றும் மகப்பேற்று மருத்துவம் ஆகிய இரு பயிற்சிகள் சுகாதார அமைச்சினால் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும், இதற்கான சுற்றுநிரூபத்தை வெளியிட விடாமல் அரசாங்க வைத்திய சங்கத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனைக் கண்டித்து தாதிய உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாக யாழ். போதனா வைத்தியசாலையின் தாதிய சங்கத் தலைவர் நல்லையா நற்குணராஜா தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் 03ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts