தரம் குறைந்த தங்க நகைகளுக்கு முலாம் பூசி குடாநாட்டு வங்கியில் மோசடி!

arrest_1யாழ்.குடாநாட்டில் தரம் குறைந்த தங்க நகைகளுக்கு புதுவித இரசாயனம் தேய்த்து தரத்தை கூடுதலாக காட்டி மோசடியான முறையில் பணம் பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது;

குறித்த தரம் குறைந்த தங்க நகையை வடமராட்சிப் பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றின் கிளையில் ஒருவர் அடகு வைக்க முயன்றுள்ளார்.

குறித்த நகையைப் பரிசோதித்த வங்கி ஊழியர் தரம் குறைந்த நகை அடகு வைக்க முடியாது என மறுத்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த நபர் வேறு சில வங்கிக் கிளைகளில் அடகு வைக்க முயன்றும் பலன் கிடைக்கவில்லை எனவும், பின்னர் வன்னிப் பகுதியிலுள்ள குறித்த வங்கி ஒன்றில் அடகு வைத்து பணம் பெற்றுக் கொண்டுள்ளார் எனவும் தெரிய வருகிறது.

கடந்த வாரம் குறித்த வங்கியின் ஆவணங்களில் உள்ள தகவலின்படி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் ஒரு குழுவாக செயற்படுகிறார்களா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான மோசடியான கும்பல் ஒன்று குழுவாக செயற்படுவதாகவும், இது குறித்து மிக அவதானமாக இருக்குமாறு வங்கியின் ஊழியர்களுக்கு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts