தமிழ் பகுதிக்கு சிங்கள கிராம சேவகர்!

வவுனியா வடக்குப் பிரதேசத்தில் சிங்களவர்களே வசிக்காத தமிழ் கிராமத்துக்கு சிங்கள கிராமசேவகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்து மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றித் தெரியவருவதாவது,

வவுனியா வடக்குப் பிரதேசத்திலுள்ள மாமடு கிராமசேவகர் பிரிவில் பணிபுரிபவர் ஒரு சிங்கள கிராமசேவகர் எனவும் அவர் தற்போது அங்கிருந்து 10ஆம் திகதி மாற்றலாகி ஒலுமடு கிராமத்துக்கு வரவுள்ளார் எனவும் அப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு நியமிக்கப்படவுள்ள கிராமசேவகர் தமிழ் மொழியில் அவ்வளவு பரிச்சயமற்றவராகவே உள்ளார் எனவும், தமிழ் மொழியில் பரிச்சயம் உள்ள ஒருவரே எமது பிரதேசத்துக்கு கிராமசேவகராக நியமிக்கப்படவேண்டுமெனவும் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் ஒரு பிரதேசத்தில் சிங்கள மொழி கிராமசேவகரை நியமிப்பதால் தமது தேவைகளை அவருக்கு தெளிவுபடுத்துவது கடினம் எனவும் எனவே எமக்கு தமிழ் மொழி பரிச்சயமுள்ள தமிழ் கிராமசேவகரே நியமிக்கப்படவேண்டுமெனவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts