தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்ட தொடர் உண்ணாவிரதப் போராட்டம் முடிவு

தமிழ் அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று நேரடியாக சந்தித்து விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று மாலை தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் விநாயகமூர்த்தி மற்றும் சிறீதரன் ஆகியோரே கொழும்பு மத்திய சிறைக்கு நேரில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தினர்.

அரச அமைச்சரான நிமால் சிறீபால டி சில்வாவினது உறுதி மொழியை கருத்தில் கொண்டும் அரசிற்கான கால அவகாசமொன்றை வழங்குவதற்காகவும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அரச உறுதிமொழி செயற்படுத்தப்படாவிடின் ஒரு மாதத்தின் பின் மீண்டும் போராட்டம் தொடரும் என கைதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வவுனியாவில் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முன்னெடுத்து வந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முடிவுறுத்தப்படும் போதே தமது உண்ணவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதாகவும் தமிழ் அரசியல் கைதிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா சிறைச்சாலைக் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டமும் தொடர்கிறது.

Related Posts