யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன், இன்று மதியம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை யாழ். பொது நூலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பான் கீ மூனின் வருகையை அடுத்து, அவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பெருமளவிலான மக்கள் யாழ். பொது நூலகத்தை சூழவுள்ள பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், ஊடகவியலாளர்கள் நூலகத்தினுள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.