தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததாலேயே அவர்கள் இன்று வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்சன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டின் ஒழுக்கம் கெட்டுப்போயுள்ளதாகவும், அரசாங்கம் தமக்கு எதிரான அரசியல்வாதிகளை அவ்வப்போது கைதுசெய்து வருவதாகவும் குறறம் சுமத்தினார்.
நாட்டில் தற்போது காட்டுச் சட்டமே அமுலில் உள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாடுவதால், அரசாங்கத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது.
எதிர்க்கட்சியினரை திருடர்கள் எனக்கூறி வழக்குத் தொடர்ந்தாலும், இதுவரைக்கும் எந்தவொரு திருடரையும் பிடிக்கவில்லை.
நல்லாட்சி அமைச்சர்கள் பட்டப்பகலில் கொள்ளையடிக்கும்போது அரசாங்கம் அமைதியாகவே இருந்து வருகின்றது.
மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் கொள்ளையடித்தபோதிலும் அவருக்கெதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் தெரிவித்தார்.