தனுஷுக்கு வில்லனாக மாறிய கவுதம் மேனன்?

இயக்குனர் கவுதம் மேனன் தனது சொந்த படத்தில் வில்லனாக நடிக்கிறாராம்.

dhanush-gautham-menon

இயக்குனர் கவுதம் மேனனின் படங்களில் எல்லாம் வில்லன்களுக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும். வில்லனாக நடிக்கும் நடிகர்கள் அதன் பிறகு ஹீரோவாகும் அளவுக்கு பிரபலம் ஆவார்கள்.

அப்படி புகழ்பெற்ற அவரது வில்லன்களுக்கு எல்லாமே குரல் கொடுத்தது அவர் தான். அவர் குரலே மிரட்டலாக இருக்கும் என்றால் நடிப்பு? இதுவரை எத்தனையோ பேர் தூண்டில் போட்டும் கூட கவுதம் இந்த விஷயத்தில் மசியவே இல்லை. ஆனால் தன் சொந்தப் படத்துக்காக நடிகராக களம் இறங்கியிருக்கிறார் என்கிறார்கள்.

என்னை நோக்கிப் பாயும் தோட்டாவில் தனுஷுக்கு வில்லனே கவுதம் மேனன் தான்என்கிறது பட யூனிட்டை சேர்ந்த சோர்ஸ் ஒன்று. வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். படத்தில் தனுஷ், மேகா ஆகாஷோடு தெலுங்கு நடிகர் ராணாவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts