யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிக்கு உப்பட்ட பகுதியில், தனது மகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதன் பின்னர் அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்த தனது 9 வயது மகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய பின்னர் குறித்த சிறுமியை அடித்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
குறித்த சிறுமியின் பெண்குறி சிதைக்கப்பட்டுள்ளது. அத்தோடு தலை, கை கால் மற்றும் உடம்பின் பல பகுதிகளில் கீறல் காயங்களும் கண்டல் காயங்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் கடுமையான தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாகவே ரூபன் நிலாஞ்சினி (வயது 9) சிறுமி இறந்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் அவரது தந்தையை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள தந்தை தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் சடலம் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முன்னைய செய்தி
இளவாலை பகுதியில் சிறுமி அடித்துக்கொலை