தண்டச்சீட்டு விவகாரம்; துவாரகேஸ்வரன் கைது

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரனின் சகோதரரான தி.துவாரகேஸ்வரனை ஞாயிற்றுக்கிழமை(05) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

thuvarakeswaran-thuva

துவாரகேஸ்வரனிற்கு சொந்தமான யாழ்-கொழும்பு பஸ் ஒன்று ஏ-9 வீதி வழியாக செல்லாமல் நல்லூர் செம்மணி வழியாக சென்ற போது பொலிஸார் மறித்து சோதனையிட்டுள்ளனர்.

பஸ் வழித்தடம் மாறி வந்த குற்றத்திற்காக பொலிஸார் தண்டச்சீட்டு எழுதிய போது, அங்கு வந்த துவாரகேஸ்வரன் தண்டச்சீட்டை கிழித்து எறிந்ததுடன், பொலிஸாரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனையடுத்து, துவாரகேஸ்வரனை கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

Related Posts