தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கருத்தமர்வு

nudpamsrilankaநுட்பம் அமைப்பு தனது இரண்டாவது கருத்தமர்வினை ICTA Srilanka நிறுவனத்துடன் இணைந்து எதிர்வரும் சனிக்கிழமை நடாத்தவுள்ளது இது தொடர்பாக நுட்பம் அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கை வருமாறு

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கருத்தமர்வு (ICT -Talks Session)

ICTA Srilanka நிறுவனம் நுட்பம் -இலங்கை தமிழ் தகவல் தொழிநுட்ப அமையத்துடன் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள மேற்படி நிகழ்வு வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் திகதி சனிக்கிழமை மு.ப 10 மணி முதல் பி.ப 1 மணிவரை யாழ்ப்பாணத்தில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும். இந்நிகழ்வானது அடுத்த நாள் பிள்ளையார் சுற்றுலா விடுதியில் நடைபெறவுள்ள தகவல்தொழில்நுட்பத்துறை நிறுவனங்களின் கண்காட்சி நிகழ்வின் முன்னோடி நிகழ்வாகும் . இந்நிகழ்வுக்கான உள்நுழைவு அனுமதி இலவசம். இங்கு பதிவு செய்வதன் மூலம் உங்களுக்கான இடத்தினை உறுதிசெய்து கொள்ளுங்கள்
கருத்துரைகள்(Talks)
1) Developer to CEO – A journey of Jaffna University Graduate
Mr Tharmarajah Suresh
CEO,Zillione ,Chairman of FITIS(Federation of Information Technology Industry Sri Lanka)
2) Latest Trends in the IT/BPO Industry
Mr.S. Muralidharen
General Manager at Sampath IT Solutions Limited

தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆரம்பத்தில் இருந்து முன்னேறி ஆசியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனமான Zillione நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ளவரும் இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை சம்மேளனத்தின் தலைவராகவும் உள்ள தமிழர் ஒருவரின் அனுபவப்பகிர்வினை அறிந்து கொள்ளவும் ,அப்படி நமது பிரதேசத்தில் இன்னும் இளைய தலைமுறையில் இருந்து புதியவர்கள் உருவாகுவதற்கான வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்ளவும் ,இக்கருத்துரைகள் உதவிசெய்யும். புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைஆரம்பிக்க விரும்பும் இளைய தலைமுறைக்கு இது ஆலோசனைக்களமாகவும் அமைந்திருக்கும்

அதேவேளை தகவல் தொடர்பாடல் தொழிற்துறையின் தற்போதைய நிலையினையும் தொழில் நுணுக்கங்களையும் உலகளாவிய ரீதியில் இந்த தொழிற்துறையில் உள்ள வாய்ப்புக்களையும் போட்டித்தன்மைகள் பற்றியும் அவற்றினை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றியும்

தற்போது தகவல் தொழில்நுட்பத்துறையில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்களும் தகவல் தொழில்நுட்ப தொழிற்துறையில் ஈடுபட்டிருக்கும் தொழில் முயற்சியாளர்களும் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்களையும் இக்கருத்துரைகள் வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்வலர்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையினை தமது இலக்காக கொண்டுள்ள அனைவரும் அணி திரண்டு வந்து பயன் பெறுமாறு நுட்பம் அமையம் மற்றும் ICTA Srilanka ஆகிய அமைப்புக்கள் கேட்டுக்கொள்கின்றன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts