டக்ளஸுக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் சபையில் கடுமையான வாய்ச்சண்டை

பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் டக்ளஸுக்கும் இடையில் கடுமையான வாய்ச்சண்டை ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் டக்ளஸுக்கும் இடையில் கடுமையான வாய்ச்சண்டை ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றம் தொடர்பில் உரையாற்றினார்.

அதற்கு அரசு சார்பாக பதிலளித்து அமைச்சர் டக்ளஸ் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், அரியநேத்திரன் உள்ளிட்டோர் அவருடன் கடுமையான வாய்ச்சண்டையில் ஈடுபட்டனர்.

கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா கள்ளருக்கும் கொள்ளையருக்கும் வாதாடும் வழக்கறிஞர், மண்டையன் குழுவின் புள்ளி, பல் பிடுங்கிய பாம்பு போன்ற வசனங்களை அடிக்கொரு தடவை கூறி கூட்டமைப்பு எம்.பி.க்களின் வாயை அடைத்தார்.

அப்போது சபைக்கு தலைமைதாங்கிக் கொண்டிருந்த பிரதிக் குழுக்களின் தலைவரும், ஈ.பி.டி.பி உறுப்பினருமான  முசந்திரகுமார் சபையை கட்டுப்படுத்துவதற்கு பல முறை முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அம்முயற்சி கைகூடவில்லை.

சபை கட்டுக்கடங்காது போகவே தங்களுடைய உறுப்பினர்களை கட்டுப்படுத்துமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி.யிடம் கேட்டுக்கொண்டார்.

சம்பந்தன் எம்.பி. கையை அசைத்து கூட்டமைப்பு உறுப்பினர்களை கட்டுப்படுத்தியதுடன் குரலை செருமியபோது பொறுங்கள், பொறுங்கள் சிங்கக் கொடி சம்பந்தனும் ஏதோ கூறமுயற்சிக்கிறார். கொடியை பற்றி ஏதோ கூறப்பார்க்கின்றார் என அமைச்ர் டக்ளஸ் தேவானந்தா தெவிக்கவே அவையிலிருந்த ஆளும் தரப்பினர் பலத்தகுரலில் சிரித்துவிட்டனர்.

எனினும், சம்பந்தன் எம்.பி. எதுவுவே கூறாமல் சபையில் இடம்பெற்ற சம்பவங்களை அமைதியாக இருந்து அவதானித்துக்கொண்டிருந்தார்.

கூட்டமைப்பினரின் இடையீட்டு கேள்விகளுக்கு பதிலளித்தும் அவர்களை கண்டித்தும் தனது உரையை தொடர்ந்த டக்ளஸ் தேவானந்தா,

நீங்கள், அரசாங்கத்தை விமர்சித்து உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் நான் அமையதியாக இருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். நான் அரசாங்கத்தின் பிரதிநிதி உங்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும். அரசாங்கம் நம்பிக்கையானது அதனால் தான் அரசாங்கத்தில் இருக்கின்றேன் என்று கூறினார்.

Related Posts