ஜெ. உள்ளிட்ட நால்வருக்கும் நிபந்தனை ஜாமீன் நிராகரித்தது கர்நாடக உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென பல்டி அடித்து விட்டதால் நான்கு பேருக்கும் உடனடியாக நிபந்தனை ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது கர்நாடக உயர்நீதிமன்றம்.

jayalalitha-sasikala-ilavarasi-sudhakaran3-600

முன்னதாக இன்று முற்பகல் நடந்த விவாதத்தின்போது, ஜெயலலிதாவின் உடல் நிலையைக் காரணமாக வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் அவருக்கு 4 ஆண்டு தண்டனைதான் என்பதால் அரசு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை என்றும் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிட்டார். மேலும் லாலு பிரசாத் வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியதைப் போல ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்க அவர் கோரிக்கை வைத்தார்.

ஆனால் ஜெயலலிதா தமிழகத்தில் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர் மற்ற மனுதாரர்களின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதற்கிடையே மதிய உணவு இடைவேளைக்காக விசாரணையை பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி சந்திரசேகரா தள்ளி வைத்தார். பிற்பகல் இரண்டரை மணியளவில் விசாரணை மீண்டும் தொடங்கியபோது ராம்ஜேத்மலானி தனது 2வது கட்ட வாதத்தை வைத்தார்.

அதைத் தொடர்ந்து பவானி சிங்கும் வாதிட்டார். அப்போது அவர் ஜாமீன் அளிக்க அரசுத் தரப்பு எதிர்க்கவில்லை என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. இறுதியில்,அவசரமாக ஜாமீன் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதி நிராகரித்தார்.முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டதாக தவறான தகவல்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பரவின

முன்னதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று முற்பகலில் நீதிபதி சந்திரசேகரா பெஞ்ச் முன்பு தொடங்கிய விசாரணையின்போது, ஜெயலலிதா சார்பில் ராம்ஜேத்மலானி ஆஜரானார். அவரும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும் காரசாரமாக வாதிட்டனர். பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ராம்ஜேத்மலானி வாதிட, பதிலுக்கு பவானி சிங்கும், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் மேற்கோள் காட்டி வாதிட்டார். ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான வாதம் மற்றும் பிரதிவாதம் 11.30முதல் 12.30வரை சுமார் 1மணிநேரம் நடந்தது. கடந்த 10 நாட்களாக சிறையில் அடைபட்டிருக்கும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே 2 முறை ஒத்திவைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது 3வது முயற்சியில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஜாமீன் மனுக்கள் தவிர, தனி நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் மனு, தீர்ப்பை ரத்து செய்யும் மனு, சொத்துக்களைப் பறிமுதல் செய்வதை நிறுத்தி வைப்பது ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் நான்கு பேரும் தாக்கல் செய்திருந்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு கூறியது. இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் 4 பேரும் ஜாமீன் கோரி கடந்த 29ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுக்கள் 30ம் தேதிக்கு விசாரணைக்கு வந்தன. விடுமுறை கால நீதிபதி ரத்னகலா விசாரணை நடத்தினார். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் யாரும் இல்லாத காரணத்தால் விசாரணையை அதிரடியாக அக்டோபர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார் நீதிபதி ரத்னகலா.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக வக்கீல்கள் உடனடியாக இந்த மனுவை விசாரிக்குமாறு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி டி.எச்.வகேலா தலையிட்டார். அவரது உத்தரவின் பேரில் அக்டோபர் 1ம் தேதி அதே நீதிபதி ரத்னகலா பெஞ்ச் விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அக்டோபர் 1ம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் விசாரணையே நடத்தாமல் 2 நிமிடங்களிலேயே வழக்கை ரெகுலர் பெஞ்ச் விசாரிக்கும் என்று கூறி விட்டு போய் விட்டார் நீதிபதி ரத்னகலா. இந்த பின்னணியில் இன்று ரெகுலர் பெஞ்ச் முன்பு ஜெயலலிதா உள்ளிட்டோரின் மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

நாளை உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மேல் முறையீடு கோரி மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

Related Posts