ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி

முதல் அமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல் மற்றும் நீர்ப்போக்கு காரணமாக முதல் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் முதலமைச்சருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த செய்தி வெளியானதும் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் முதலமைச்சரை காண மருத்துவமனைக்கு வந்தனர். மேலும் தொண்டர்கள் பலரும் மருத்துவமனை அருகில் திரண்டனர்.

மருத்துவ சிகிச்சை முடிவடைந்து முதலமைச்சர் வீடு திரும்புகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Posts