ஜனாதிபதி தலைமையில் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளதாக வடமாகாண ஆளுநரின் செயலளர் எஸ்.இளங்கோவன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இவ் அபிவிருத்திக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர் மற்றும் அரச திணைக்களங்கள், பொது அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தின் நிரந்தர அபிவிருத்தித்திட்டத்தில் அனைவரையும் ஒன்றினைத்து செயற்படும் வகையில் இவ் அபிவிருத்திக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்காலத்தில் யாழ். மாவட்டத்தின் பொருளாதார, கல்வி, சுகாதார, விவசாய, மீன்பிடி, கைத்தொழில் மற்றும் ஏனைய அபிவிருத்திப் பணிகள் பற்றி ஜனாதிபதி தலைமையில் ஆராயவுள்ளதாகவும் எஸ்.இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ். குடாநாட்டிற்கான விஜயத்தை திங்கட்கிழமை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி,
சாவகச்சேரி நோயாளர் விடுதிக் கட்டிடம் மற்றும் யாழ். மத்திய கல்லூரியில் நீச்சல்த் தடாகத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.

Related Posts