சைக்கிள்கள் வழங்கிவைப்பு

cycle-doneted13 வயதிற்கு கீழ்ப்பட்ட மாணவர்களைக் கொண்ட வருமானம் குறைந்த 50 குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட புதிய சோனகத்தெரு பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கே சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் குடும்பங்களுக்கான சைக்கிள்களை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வழங்கிவைத்துள்ளார்.

புதிய சோனகத்தெருப் பகுதியில் வசிக்கும் 13 வயதிற்கு கீழ்ப்பட்ட மாணவர்களைக் கொண்ட வருமானம் குறைந்த 50 குடும்பங்களின் தேவைக்காக வடமாகாண ஆளுநரிடம், யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்தச் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts