செல்வராகவன் இயக்கத்தில் விஜய்?

விஜய் தற்போது தனது 60-வது படமாக பரதன் இயக்கும் ‘பைரவா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறித்து கோலிவுட்டில் பரவலாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

Selvaraghavan-vijay

அதன்படி, விஜய் அடுத்ததாக ‘தெறி’ படத்தை இயக்கிய அட்லி இயக்கத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. கூடவே, செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்திலும் விஜய் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் விஜய்யை சந்தித்த செல்வராகவன், அவருக்கு ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதை பிடித்துப்போய் அதில் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விஜய்-செல்வராகவன் கூட்டணி இணைந்தால் கண்டிப்பாக அந்த படம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

செல்வராகவன் தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக பணியாற்றி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சந்தானம்-ரெஜினா நடிக்கும் ஒரு படத்தையும் இயக்கவிருக்கிறார். இதையடுத்து, விஜய் படத்தை செல்வராகவன் இயக்குவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Related Posts