செக் குடியரசின் நாடாளுமன்ற தூதுக்குழு யாழ் விஜயம்

செக் குடியரசின் நாடாளுமன்ற தூதுக்குழுவினர் இன்று புதன்கிழமை யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர். டேவிட் லொட்றஸ்கா தலைமையிலான இக்குழுவினர் யாழ். ஆயர் தோமஸ் சௌந்தர நாயகம் ஆண்டகையைச் சந்தித்து யாழ் மாவட்டத்தின் நிலமைகள் குறித்து கேட்டறிந்துள்ளனர்.

அத்துடன் ஆயருடனான சந்திப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள மரியண்ணை பேராலயத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இங்கு வருகை தந்த இக்குழுவினர், வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

டேவிட் லொட்றஸ்கா தலைமையிலான செக் குடியரசின் நாடாளுமன்ற தூதுக்குழுவில் திருமதி.சுஸானா பூட்னறோவா உள்ளடங்கிய குழுவினருடன் செக்குடியரசின் புதுடில்லி தூதரகத்தைச் சேர்ந்த இருவருமாக மொத்தம் 8 பேர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts