சுழிபுரத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு

Hand-bombவட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் காணி ஒன்றில் இருந்து இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள வெற்றுக்காணியில் மோட்டார் குண்டுகள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இரு மோட்டார் கைக்குண்டுகளும் மீட்கப்பட்டு சுழிபுரம் பகுதி இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினார்.

மீட்கப்பட்ட மோட்டார் கைக்குண்டுகள் இராணுவத்தினரின் பரிசீலணையின் பின்னர் அழிக்கப்பட்டதாகவும், வட்டுக்கோட்டை பொலிஸார் மேலும் கூறினர்.

Related Posts