சுற்றுலாத் துறையினருடன் இணைய ஆர்வமுடையோர் இணையலாம்

வடமாகாணத்தைச் சேர்ந்த எவரும் முதலீட்டாளர்களாக இணைய முடியும். சுற்றுலாத்துறை ஊடாக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள ஆர்வமுடைய முதலீட்டாளர்கள் வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தில் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளலாம்.

சுற்றுலாத்துறையூடாகத் தமது முதலீட்டை அபிவிருத்தி செய்யமுடியும். வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் தலைவர் ரி.வை. சுந்தரேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 2 மாதகாலமாக வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுலா ஒன்றியம் இராசாவின் தோட்டம் வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் இயங்கி வருகின்றது.
இந்த ஒன்றியத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்த எவரும் முதலீட்டாளர்களாக இணைந்து கொள்ளமுடியும்.

ஒன்றியத்தில் இணைவதற்கு தரகர்கள் எவரையும் நாடவேண்டிய அவசியம் இல்லை. 0213216434 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ, ஒன்றிய முகவரியுடனோ தொடர்புகொண்டு அங்கத்தவர்களாக இணைய முடியும்.

சாதாரணமாக ஒரு வாகனத்தைச் சொந்தமாக வைத்திருப்பவர் உட்பட உணவகங்கள், ஹோட்டல்கள், தங்குமிட வசதிகள் பெற்றுக்கொடுப்போர் என சுற்றுலாத்துறையினர் பயன்படுத்தக்கூடிய முதலீடுகளை வைத்திருக்கக்கூடிய முதலீட்டாளர்கள் ஒன்றியத்தில் அங்கத்தவர்களாக இணைய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts