சுரேஷ் பிரேமச்சந்திரன் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்படுகின்றார்: தவராஜா

thavarasaதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் எஸ்.தவராஐா குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ்.காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

அரச பணி என்று அச்சிடப்பட்டு நாடாளுமன்ற முத்திரை ஒட்டப்பட்ட காகித உறையுனுல் தேர்தல் பிரசார துண்டுபிரசுரங்களினை உள்ளடக்கி பல இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றார்.

இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும்.

நவநீதம்பிள்ளையை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பது பிரச்சனைகளை எடுத்து கூறுவதாக இருக்க வேண்டுமே தவிர அதை தேர்தல் பிரசாரமாக மாற்றக் கூடாது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளதாகவும்’ அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts