சுயதொழில் ஓய்வூதிய திட்டத்திற்கு 1500 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் பாக்கியராஜா பிரதீபன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
60 வயதினை பூர்த்தியடைந்த தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள், இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தலைமை காரியாலயத்தினால் விநியோகிக்கப்படுகின்ற விண்ணப்ப படிவத்தினை பூரணபடுத்தி பிரதேச செயலகத்தின் ஊடாக யாழ்.மாவட்ட செயலக இலங்கை சமூக பாதுகாப்பு சபை அலுவலகத்தில் சமர்ப்பித்து தமக்குரிய புத்தகத்தினை பெற்றுக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளனர்.
- Wednesday
- January 15th, 2025