சுதந்திரக்கட்சியில் போட்டியிட தயா மாஸ்டர் தீர்மானம்

thaya-masterவடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

இதற்காக கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்முகத் தேர்வில் தயா மாஸ்டர் கலந்துகொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்த பிரதமர் ஜயரட்ண அவர்களை தயா மாஸ்டர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் இதன்போது பிரதமர், தேர்தலில் வெற்றிபெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தேவையான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வில் யாழ். மாநகர உறுப்பினரும் சட்டத்தரணியுமான றெமீடியஸ், சாவற்காட்டு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் உட்பட 23பேர் இந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டுள்ளதாக சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

Related Posts