சீவல் தொழிலாளி ஒருவர் பனை மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இளவாளை உயரப்புலம் பகுதியில் திங்கள் மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில், அதே இடத்தினைச் சேர்ந்த 59 வயதான கணபதி சின்னத்தம்பி என்பவரே வீட்டு வளவில் இருந்த பனை மரத்திலிருந்து சறுக்குண்டு விழுந்துள்ளார்.
பனை மரத்தில் இருந்து விழுந்த இவரை உறவினர்கள் சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்த வேளை உயிரிழந்துள்ளார்.