சிறுவர் சாகச விளையாட்டு திடலுக்கான அடிக்கல் நாட்டல்

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் எற்பாட்டில் சிறுவர்களின் ஆளுமை, ஆற்றல்களை விருத்தி செய்யும் நோக்குடன் யாழ் சிறுவர் பூங்காவில் சிறுவர்களுக்கான சாகச விளையாட்டுத் திடல் அமைப்பதற்கான முதற்படியான அடிக்கல் நாட்டும் விழா நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றது.

scout

50 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்த சாகச விளையாட்டுத் திடலுக்கான அடிக்கல்லினை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி நாட்டினார்.

சுழலும் ராட்ணம், கயிறில் நடத்தல், சிறுவர்களுக்கான விநோத விளையாட்டுக்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன.

scout2

இந்த அடிக்கல் நாட்டு விழாவில், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ் மாவட்ட சாரணர் அமைப்புத்தலைவர் ப.தேவரஞ்சன், ஆளுநர் செயலக உயர் அதிகாரிகள், சாரணர்கள் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts