கைதடி சிறுவர் இல்லத்தில் இருந்து வெளியேறிய 24 சிறுமிகளையும் மீண்டும் அதே சிறுவர் இல்லத்தில் இணைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றத்தின் உத்தரவிட்டுள்ளது.
இதனால் பல்வேறு சிறுவர் இல்லங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 24 சிறுமிகளையும் மீண்டும் கைதடி சிறுவர் இல்லத்தில் இன்று புதன்கிழமை சேர்க்கப்பட்டுள்ளனர் என வட மாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் தங்கவேல் உமா தெரிவித்தார்.
இந்த சிறுவர் இல்லத்தின் நிர்வாக கட்டமைப்புக்கள் யாவும் மாற்றம் செய்யப்பட்டு பெண்கள் உள்வாங்கப்பட்ட புதிய நிர்வாகமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் வட மாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த இல்லம் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் இந்த சிறுவர் இல்லம் தொடர்பான பகுதிக்குரிய நன்நடத்தை உத்தியோகஸ்தரின் கண்கானிப்பு தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தங்கவேல் உமா தெரிவித்தார்.
குறித்த நன்நடத்தை உத்தியோகஸ்தர் ஒழுங்காக செயற்படவில்லை என்று அறியப்படும் பட்சத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.