உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் யாழ்.பிராந்திய அலுவலகத்தால் சிறந்த வரி செலுத்துநர்களுக்கான சிறப்புரிமை அட்டை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 6.30 மணிக்கு வீரசிங்கம், மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக யாழ்.பிராந்திய பொறுப்பு உதவி ஆணையாளர் திருமதி க.சர்வேஸ்வரன் செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி கல்யாணி தகநாயக்கா கலந்துகொள்ளவுள்ளார்.
யாழ்.பிராந்தியத்துக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட 24 சிறந்த வரி செலுத்துநர்களுக்கான சிறப்புரிமைச் அட்டைகள் இதன்போது வழங்கப்படவுள்ளன.