சிகரட்டில் நான்காயிரத்து 800 விஷ இரசாயனங்கள்

ஒரு சிகரட்டில் நான்காயிரத்து 800 விஷ இரசாயனங்கள் இருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் 250க்கும் அதிகமானவை கடுமையான விஷம் கொண்ட இரசாயனங்களாகும். புற்றுநோயை ஏற்படுத்தும் 65 வகையிலான இரசாயனங்களும் இதில் காணப்படுகின்றன.

இதனால், சிகரட் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக ஒன்பது கோரிக்கைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

Related Posts