‘சார்க்’ கட்டுரைப் போட்டியில் யாழ்.இந்து மாணவர்கள் 1ம் 2ம் இடங்களைத் பெற்றனர்

‘சார்க்’ அமைப்பினால் அதன் 28ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்ட ஆய்வுக்கட்டுரைப்போட்டியில் யாழ். இந்துக்கல்லுரி மாணவர்களாகிய செல்வன் சிறிஸ்கந்தராஜா சிவஸ்கந்தஸ்ரி முதலாம் இடத்தையும், செல்வன் ஜீவரட்ணராஜா சஜீவன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் இசுறுபாய, பத்திரமுல்லையில் அமைந்துள்ள ஜனகலகேந்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இவ்விழாவில் இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் திரு.நீயுமோல் பெரேரா மற்றும் ‘சார்க்’ நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Posts