சவுதியில் கல்லெறிந்து கொலை செய்ய தீர்ப்பளிக்கப்பட்ட பெண் நாடு திரும்பினார்

சவுதி அரேபியாவில் கல்லெறிந்து கொலை செய்வதற்கு தீர்பளிக்கப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்லெறிந்து கொலை செய்வதற்கு தீர்ப்பளிக்கப்பட்ட குறித்த பெண், மீண்டும் அந்நாட்டு நீதிமன்றத்தினால் மூன்று வருட சிறைத்தண்டனைக்குரியவளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும் வகையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவளது சிறைத் தண்டனை கடந்த ஜுன் மாதம் முடிவடைந்துள்ள நிலையில் அவர் நாடு திரும்பியுள்ளதாக அரப் நியுஸ் இணையத்தளம் அறிவித்துள்ளது.

கல்லெறிந்து கொலை செய்யப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்ட பெண்ணின் தண்டனையைக் குறைக்குமாறு வேண்டி சவுதி நீதிமன்றத்தில் மனுவொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டே இவளது தண்டனையை 3 வருட சிறைத் தண்டனையாக குறைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

Related Posts